ரொறன்ரோவில் உயிராபத்தான நோய் குறித்து எச்சரிக்கை
கனடாவின் ரொறன்ரோவில் உயிராபத்தான பக்றீரியா தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உயிர் அபத்தை ஏற்படுத்தக் கூடிய பக்றீரியா தொற்று தொடர்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்த ஆண்டில் குறித்த பக்றீரியா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பக்றீரியா தாக்கத்தினால் மூளையுறை அழற்சி ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் இந்த நோயை தடுத்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளில் இந்த நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்க விடுத்துள்ளனர்.