இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியது.
நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் வடக்கு சுலவேசியில் உள்ள மினஹாசா மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொலுக்கா கடற்பரப்பில், டெர்னேட் நகருக்கு அருகில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் நிலநடுக்கத்தின் அளவு அதிகமாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், பின்னர் அது 7.4 ரிச்டர் என உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை, இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.