மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
மியான்மரில் 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவுள்ள இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் இந்த நில நடுக்கத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் மூவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் - மியான்மர், சகைங் நகருக்கு வடமேற்கு 16 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மியான்மர் ஆறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
"நிலநடுக்க பாதிப்புகளை விரைவாக மதிப்பீடு செய்து மீட்பு பணிகளை மேற்கொள்வோம்" என மியான்மர் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
நெய்பிடாவின் 1,000 படுக்கைகள் கொண்ட பொதுமருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களை அவசர பிரிவிற்கு வெளியே தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலர் வலி கொடுமையாக உணர்ந்து தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"யாங்கூன் நகரம் முழுவதும் சுற்றி, உயிரிழப்பு மற்றும் சேதங்களை ஆய்வு செய்து வருகிறோம்" என மியான்மர் தீயணைப்பு சேவை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தவுன்னூ நகரில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
மியான்மர் மற்றும் தாய்லாந்து மீட்பு படைகள் களத்தில் இறங்கியுள்ளன.