இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணி பெண்ணொருவரும் பலி
காசாவில் செவ்வாய்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 7 மாத கர்ப்பிணியொருவரும் அவரது மகனும் கொல்லபப்ட்டதாக சர்வதேச தகவ்ல்கள் கூறுகின்றன.
இது தொடர்பில் ஏபி மேலும் தெரிவித்துள்ளதாவது. காசாவை சேர்ந்த அப்னன் அல் கானாம் 13 மாதங்களிற்கு முன்னர் போரின் போது தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்நிலையில் அவர் வசந்தகாலத்தில் மீண்டும் பிரசவிக்கயிருந்தார். இந்த முறை அவர் அழுக்குமிகுந்த கூடாரத்தில் வசித்துவந்தார்.
பலவீனமான போர்நிறுத்தம் ஒரளவு அமைதியை கொண்டுவந்திருந்தது. எனினும் செவ்வாய்கிழமை அதிகாலைக்கு முன்னர் இஸ்ரேலின் விமானதாக்குதல்கள், அந்த குடும்பம் வாழ்ந்த கூடாரத்தை தாக்கின ,ஏழு மாத கர்ப்பிணியான அப்னன் அல் கானமும், அவரது இளைய மகன் முகமட்டும் கொல்லப்பட்டனர்.
காசாபள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் மேற்கொண்ட எதிர்பாராத தாக்குதல் காரணமாக கொல்லப்பட்ட 400 பேரில் அவர்களும் உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்களும் குழந்தைகளும் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.