பிறந்த 2 மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை கொல்லத் துணிந்த செவிலியர்
பிரிட்டனில் மருத்துவமனை ஒன்றில் நடந்தேறிய பல கொலைகள் தொடர்பில் விசாரணையை எதிர்கொள்ளும் செவிலியர் ஒருவர் தொடர்பில் அதிரவைக்கும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் லூசி லெட்பி என்ற 33 வயது செவிலியர், பிறந்த இரண்டு மணி நேரத்தில் பெண் குழந்தையை கொல்ல முயன்றார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறை பிரசவத்தில் பிறந்த அந்த பெண் குழந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த சுவாசக் குழாயை லூசி லெட்பி அகற்ற முயண்றுள்ளார். ஆனால் அந்த வேளை கவனிப்பாளர் ஒருவர் அந்த அறைக்குள் நுழைய லூசி லெட்பி அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
2016 பிப்ரவரி மாதம் நடந்த இச்சம்பவம் தற்போது மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணையின் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நள்ளிரவு 2.12 மணிக்கு பிறந்த அந்த குழந்தையானது சுமார் 3.50 மணியளவில் கடும் அவஸ்தையில் சிக்கியுள்ளது.
குழந்தையின் ஆக்சிஜன் அளவு 40% வரை சரிவடைந்தது. இந்த நிலையில் தீவீரமாக பரிசோதித்த மருத்துவர்கள், மாஸ்க் பொருத்தி சுவாசிக்க வைத்துள்ளனர். இதன் பின்னரே குழந்தை சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது.
மருத்துவர் ஜெயராம் என்பவரே, குழந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த சுவாச குழாயில் சிக்கல் இருப்பதை கண்டறிந்து துரிதமாக செயல்பட்டுள்ளார்.
ஆனால், சிறப்பு கவனம் அளித்தும் குழந்தை இறந்துள்ளது. அளிக்கப்பட்ட சான்றிதழில் கடுமையான சுவாச பிரச்சனை காரணமாகவே குழந்தை இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.