இங்கிலாந்தில் ஆசிரியர்களைத் தாக்கிய சிறுவர்கள்; முன்பள்ளிகளில் இருந்து விலக்கல்!
இங்கிலாந்தில் ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான முன்பள்ளி சிறுவர்கள் ஆசிரியர்கள் மீது நடத்திய உடல்ரீதியான தாக்குதல்களையடுத்து, முன்பள்ளி சிறுவர்கள் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சிறுவர்களின் இந்த அடாவடித்தனமானது கொவிட் காலப்பகுதியில் இருந்து தொடர்ந்து வருவதாகவும், அக்காலப்பகுதியில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததே இதற்குக் காரணமெனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
1800க்கும் மேற்பட்ட சிறுவர்கள்
கடந்த 2022 - 2023 கல்வி ஆண்டில் மட்டும் 3500க்கு மேற்பட்ட சிறுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்தோர் மீது நடத்திய தாக்குதலை அடுத்து பிரித்தானியாவில் முன் பள்ளிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் முன் பள்ளியில் ஏனைய சிறுவர்களை தாக்கியமைக்காக 1800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் முன்பள்ளிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் காலத்தில் தேசிய அளவில் பாடசாலைகள் மூடப்பட்டதால் அந்த சந்தர்ப்பங்களில் குழந்தைகள் தீய பழக்கங்களுக்குள்ளானதாகக் கருதப்படுகிறது.
மேற்படி கல்வி ஆண்டில் எல்லா வயதினரினரிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளி மாணவர்கள் திருட்டு குற்றங்களுக்காக பாடசாலைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, பாடசாலைகளுக்குள் ஆயுதங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள், போதைப்பொருட்கள் என்பவற்றைக் கொண்டு சென்றதற்காக 148 பேர் தடைகளை எதிர்கொண்டனர்.
சமூக ஊடகங்கள், தொழில் நுட்பசாதனங்கள் போன்றவற்றை முறையற்ற வகையில், பயன்படுத்திய குற்றச்சாட்டிலும் பல மாணவர்கள் விலக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வயது சிறுவர்களும் அடங்ககின்றனர்.
அதேவேளை ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுடைய மாணவர்களும் முன்பள்ளிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.