எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் கடுமையாக திட்டிய பெண்! வீடியோ
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான குழு விவாதத்தில் கூட்டத்தினர் முன் பேசிய பிரேசில் அதிபரின் மனைவி ஜன்ஜா டி சில்வா, எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் கடுமையாக திட்டினார்.
அப்போது, கூடியிருந்தவர்களில் சிலர் அதனை வரவேற்று கைதட்டி உற்சாகப்படுத்தினர். இது பற்றிய காணொளி ஒன்றும் வைரலானது.
பிரேசிலில், எக்ஸ் சமூக வலைதளம் வழியே போலியான செய்திகள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் செய்திகள் பரப்பப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து அந்த கணக்குகளை முடக்கும்படி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேபோன்று, பிரேஸில் நாட்டுக்கு என தனியாக ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படியும் அந்நிறுவனத்திடம் கேட்டு கொள்ளப்பட்டது.
Fuck you, Elon Musk,”
— Visegrád 24 (@visegrad24) November 16, 2024
says Brazil's first lady, Janja da Silva, during the G20 Social panel. pic.twitter.com/z99XqiHwnj
இதனை எலான் மஸ்க் கவனத்தில் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அவர் அலட்சியம் செய்ததன் தொடர்ச்சியாக, பிரேசிலில், நடப்பு ஆண்டில் ஒரு மாதத்திற்கு எக்ஸ் சமூக வலைதளம் இடைநிறுத்தப்பட்டது.
இதனால், பிரேசில் அரசுக்கும், மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த சூழலில் மஸ்க்கை, ஜன்ஜா டி சில்வா கடுமையாக சாடியுள்ளார். இதற்கு மஸ்க்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
நீங்கள் அடுத்த தேர்தலில் தோற்று போவீர்கள் என பதிலளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்ப் வெற்றி பெற பின்னணியில் இருந்து எலான் மஸ்க் உதவினார் என்ற செய்தி பரவலாக பரவி வந்தது.
இந்நிலையில், பிரேசில் நாட்டின் தேர்தலிலும் அவர் ஆதிக்கம் செலுத்த கூடும், எனுமளவுக்கு அவருடைய எக்ஸ் தள பதிவு அமைந்துள்ளது என அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகின்றது.