புலம்பெயர் இலங்கையர்களுக்கு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட செய்தி!
நாடளாவிய ரீதியில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (16.11.2023) ஆர்.ஐ.டி.அலஸின் 10ஆவது நினைவு தின நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மொழி அறிவு விருத்தி
அவர் மேலும் தெரிவிக்கையில், மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.
2030ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.