ஈக்குவடோரில் கொலை செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்!
ஈக்வடோரில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடவிருந்த வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ (59 வயது)தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
குய்டோ நகரில் புதன்கிழமை (09.08.2023) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரான விலாவிசென்சியோ கார் ஒன்றில் ஏறியபோது, துப்பாக்கிச்சூட்டிற்கிலக்காகி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், பாதுகாப்பு அதிகாரிகளின் துப்பாக்கிசூட்டில் காயமடைந்து உயிரிழந்துள்ளார் எனவும் ஈக்குவடோரின் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேற்படி குற்றச்செயல் தண்டனையிலிருந்து தப்ப மாட்டாது என ஈக்வடோரில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடவிருந்த வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினரான விலாவிசென்சியோ கார் ஒன்றில் ஏறியபோது, அவரை ஒரு நபர் சுட்டுக்கொன்றார் என அவரின் பிரச்சாரக்குழு அங்கத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், பாதுகாப்பு அதிகாரிகளுடனான துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தார் எனவும் பின்னர் அவர் உயிரிழந்தார் எனவும் ஈக்குவடோரின் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி கியர் மோ லசோ இக் குற்றச்செயல் தண்டனையிலிருந்து தப்ப மாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.