கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மின்சாரம் தடைப்பட்டது
கடந்த அரசாங்கத்தின் செயற்நாடுகளினாலேயே மின்சாரம் தடைப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடு முழுவதிலும் மின்சாரம் தடைப்பட்ட விவகாரம் தொடாபில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களின் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் மின்சாரம் தடைப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாணந்துறை மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட மின்சார விநியோக சமனிலையின்மையினால் நாடு முழுவதிலும் மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் தொடர்பில் புரிதல் இல்லாத பலவீனமான வழிகாட்டல்களினால் இந்த நிலைமை ஏற்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினை ஏற்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார விநியோகம் தடைப்பட்டதனால் அசௌகரியங்களை எதிர்நோக்கியவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வர ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.