இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் பிரதமர் போரிஸ் கலந்துகொள்ளமாட்டார்

Vasanth
Report this article
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கலந்து கொள்ள மாட்டார் என டவுனிங் ஸ்ட்ரீட் அறிவித்துள்ளது.
பிரிட்டனின் கொரோனா வைரஸ் விதிமுறைகளின் கீழ் ஏப்ரல் 17 விண்ட்சர் கோட்டையில் நடைபெறும் பிலிப்பின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள 30 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் இறுதி சடங்கில் இளவரசர் பிலிப்பின் மனைவி, குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் பிற நெருக்கிய குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "பிரதம அமைச்சர் அரச குடும்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட விரும்புகிறார்,
எனவே முடிந்தவரை பல குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க சனிக்கிழமை இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மாட்டார்" என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதேவேளை இளவரசர் பிலிப்புக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக எட்டு நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.