பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். மும்பையில் தரையிறங்கும் அவர் இன்றும் நாளையும் பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்கள், தொழில்துறை நிபுணர்களை சந்தித்துப் பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி அவர் டெல்லி செல்கிறார். மார்ச் 2-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

இந்த சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, அரிய வகை கனிமங்கள், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இதன்போது ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஜஸ்டின் கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் பகிரங்கமாக குற்றம் சுமத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடைலான நட்பில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா செல்லும் நிலையில், இப்போது இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.