பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை -பிரதமர் நரேந்திர மோடி
ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ”ஒரு பெருங்கடல் உச்சி மாநாட்டில்” பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார்.அப்போது அவர், இந்தியா கடல்சார் நாகரீகமாக இருந்து வருவதாகவும், பண்டையகால வேதங்கள் கடலின் பயன்கள் குறித்து பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நடவடிக்கையில் பிரான்ஸுடன் இந்தியா இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் மோடி தெரிவித்தார்.
மேலும், இந்திய கடற்படை வீரர்களை கடலில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு 100 நாட்கள் ஒதுக்கும்படி அறிவுறுத்தியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.