மீண்டும் அரச குடும்பத்துடன் இணைய முயற்சிக்கும் இளவரசர் ஹாரி!
பிரித்தானிய இளவரசர் ஹாரி கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
இதனால் அரச குடும்பத்தினருக்கும், ஹாரி-மேகன் தம்பதிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளதாக தகவல் வெளிவந்தன.

இதன் பின்னர். 2022-ல் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர்.
இவ்வாறான நிலையில் தற்போது அரச குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்க ஹாரி முயற்சித்து வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதற்காக அவர் தனது முன்னாள் ஆலோசகர்களின் உதவியை நாடி உள்ளதாக கூறப்படுகிறது.
 அதேசமயம் அரச குடும்பத்தில் முழுமையாக திரும்புவதை அவர் நோக்கமாக கொண்டிருக்கவில்லை என அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        