மலர்களை கண்டு கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த இளவரசர் வில்லியம்!
மறைந்த ராணிக்காக மக்களால் வைக்கப்பட்ட மலர்கொத்துக்களுக்கு இடையிடையே இருந்த பொருளைக் கண்டதும் இளவரசர் வில்லியம்(Prince William) உணர்ச்சிவசப்பட்டு கண்ணீரை அடக்க முடியாமல் தவித்ததாக தெரியவந்துள்ளது.
வேல்ஸ் இளவரசர் வில்லியம்,(Prince William) ராணிக்கு பொதுமக்களின் உணர்ச்சிபூர்வமான அஞ்சலிகளால் மிகவும் நெகிழ்ந்ததாக கூறினார்.
ஆனால் பூக்களுக்கு மத்தியில் பேடிங்டன் கரடி பொம்மைகள் இருப்பதைப் பார்த்தது தான் கண்ணீரை அடக்க முடியாமல் தவிக்கச்செய்ததாகவும், தனது அமைதியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறியதாகவும் கூறியுள்ளார்.
இளவரசர் மற்றும் இளவரசி கேட் திங்கட்கிழமை இறுதிச் சடங்கை விண்ட்சரில் நடத்த உதவிய ஹீரோக்களுக்கு நன்றி தெரிவித்தனர், அவர்களின் தடையற்ற செயல்பாடு அதை ஒரு அசாதாரண அனுபவமாக மாற்றியது என்று கூறினர்.
இளவரசரும் இளவரசியும் பெர்க்ஷயரில், இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பொறுப்புக்களை சுமந்து பணியாற்றியவர்கள் அனைவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது, மறைந்த ராணியின் மரணம் மற்றும் அவரது இறுதிச் சடங்கின் முடிவிற்கு இடையில் ஓடிய 24 மணி நேர செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்த அவர்கள், பலரின் முயற்சிகளுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இளவரசர் கூறினார்.
அப்போது, இளவரசர் வில்லியம் (Prince William)இறுதிசடங்கு நிகழ்வுகளுக்கு இடையே தன்னை மிகவும் நெகிழவைத்த தருணங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது, ராணிக்கு மிகவும் பிடித்த இந்த பேடிங்டன் பொம்மைகள் குறித்து கூறினார்.
முடிந்தவரை பல இரங்கல் செய்திக்குறிப்புகளைப் பிடித்ததாகவும், அவற்றில் சில, கட்டுரைகள் போல் இருந்ததாகவும், குறிப்பாக குழந்தைகள் வைத்த செய்திக்குறிப்புகள் நெகிழவைத்ததாகவும் கூறினார்.
மேலும், செப்டம்பர் 8ம் திகதி, ராணி இறந்த பிறகு, ஸ்காட்லாந்தில் பால்மோரலுக்கு மேலே ஐந்து வானவில்களை குடும்பத்தினர் பார்த்ததாகக் கூறிய இளவரசர் வில்லியம்(Prince William), அசாதாரண காட்சி தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.