ஒன்டாரியோவில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைது
ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 13 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு, வாகனத் திருட்டு, வீட்டு குடியிருப்பு கொள்ளை மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு வன்முறை குற்றச்செயல்களில் இந்த நபர்கள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்புடுகின்றது.
இந்த 13 பேர் மீது 150-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யார்க் பிராந்திய போலீஸ் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு வருடங்களாக பல பிராந்திய போலீசார் இணைந்து நடத்திய “ப்ராஜெக்ட் ரேங்கிலர்” என்ற விசாரணையின் மூலம் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல்வேறு குழுக்கள் மற்றும் இடங்களைச் சேர்ந்த ஆண்கள் இணைந்து, லாபமீட்டும் நோக்கில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டொரோண்டோ, பீல், லண்டன் (ஒன்டாரியோ), கியுபெக் மற்றும் ஒன்டாரியோ மாகாண போலீஸ் பிரிவுகள் இணைந்து விசாரணையில் பங்கேற்றுள்ளன.