பிரான்ஸில் நாடு முடங்கும் அளவிற்கு போராட்டம்!
பிரான்ஸில் 12 ஆண்டுகளின் பின்னர் நாடு முடங்கும் அளவிற்கு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வெளியிட்ட ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதற்கட்ட வேலை நிறுத்தத்தையும் கண்டனப் பேரணிகளையும் நடத்தத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு, தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு ஆகிய நாட்டின் இரண்டு மிக முக்கியமான தொழிற்சங்கங்களுடன் பிரதான அனைத்து தொழில் சங்கங்களும் மாணவர் இயக்கங்களும் இணைந்து இந்த அழைப்பை விடுத்திருக்கின்றன.
பிரான்ஸில் அரசுக்கு எதிராக சகல தொழிற்சங்கங்களும் ஒரேசமயத்தில் ஒரே இயக்கமாக இணைந்து போராட்டத்தில் குதிப்பது கடந்த 12 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை என்று தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்களது இந்த மாபெரும் இயக்கத்துடன் இணையுமாறு சோசலிஸக் கட்சி உட்பட சகல இடதுசாரிக் கட்சிகளும் தத்தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
அதன்படி முதலாவது கட்ட எதிர்ப்பு நடவடிக்கையாக இன்றைய தினம் முழு அளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு சகல துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.