மெல்பர்னில் கொரோனா முடக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி; பலர் காயம்
அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் கொரோனா முடக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி யில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் 700 பேர் வரையானவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணி யில் ஏற்பட்ட மோதலிலேயே பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார மிளகு புகை விசிறியதுடன் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறியமைக்காக 200ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் புறநகரங்களில் இருந்து சட்டவிரோதமாக மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பிரதான நகருக்குள் நுழைவதை தடுக்க பொலிஸார் பல வழிகளில் முற்பட்டுள்ளனர்.
இதேவேளை அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக சனத்தொகை கொண்ட மாநிலமாக மெல்பர்ன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.