ட்ரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுதும் வெடித்த ஆர்ப்பாட்டம்

Viro
Report this article
ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் மில்லியன் கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
‘நோ கிங்ஸ்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் ட்ரம்பின் பிறந்த நாளான நேற்றுமுன்தினம் (14) மாலை இராணுவ அணிவகுப்பு வொஷிங்டன் டி.சியில் இடம்பெற்ற போது நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம்
அமெரிக்க இராணுவத்தின் 250 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
ட்ரம்பை விமர்சிக்கும் பதாகைகளை அசைத்த வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சட்டமியற்றுபவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உரையாற்றினர்.
இத்தகைய கூட்டங்கள் நியூயோர்க், பிலடெல்பியா மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் இடம்பெற்றுள்ளன.
பிலடெல்பியாவில், லவ் பார்க்கில் கூடியிருந்த மக்கள், நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.