தமிழீழ தேசிய கொடிதினம்; தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் ; கனடா அரசியல்வாதி
தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்வதாக கனடா ஒன்டாரியோவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியின் மரிட்ஸ்டைல்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்ஈழ தேசிய கொடி தினத்தை குறிக்கும் நிகழ்வு குறித்து விடுத்துள்ள செய்தியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழீழ தேசிய கொடிதினம்
இன்று தமிழீழ தேசிய கொடிதினத்தில் ,ஒன்டாரியோவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் நாங்கள் தமிழ் சமூகத்தின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கௌரவிக்கின்றோம் என மரிட்ஸ்டைல்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாள் தமிழனப்படுகொலை மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட தமிழ் மக்கள் பல தசாப்தங்களை அனுபவித்த வன்முறைகளை நினைவுகூரும் நாளாகும்.
இந்த அட்டுழியங்கள் நினைத்துப்பாக்கமுடியாத வலியை துயரத்தை ஏற்படுத்தின அதேவேளை இது தமிழ் சமூகத்தின் உறுதிப்பாட்டையும்,வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ் சமூகம் நீதிமற்றும் மனித உரிமைகளிற்கான போராட்டத்திற்கான உத்வேகத்தை அளிக்கின்ற ஒரு சமூகம். புதிய ஜனநாயக கட்சியினராகிய நாங்கள் தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்கின்றோம்,
உங்கள் கலாச்சாரம் மீள்எழுந்தன்மை மற்றும் பங்களிப்புகள் எங்கள் மாகாணமான ஒன்டாரியோவை வளப்படுத்தி,எங்கள் அனைவருக்கும் சிறந்த இடமாக்குகின்றது.
இன்றைய நாளில் நாங்கள் செய்யப்பட்ட தியாகங்களை மீள நினைவுகூருவதுடன்,நீதி சமாதானம் ஆகியவற்றிற்காக மீண்டும் அர்ப்பணித்துக்கொள்வோம் எனவும் கனடா ஒன்டாரியோவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியின் மரிட்ஸ்டைல்ஸ் தெரிவித்துள்ளார்..