புட்டின் தவறாக கணக்குப் போட்டுவிட்டார்; பெரிய விலை தரவேண்டியிருக்கும்; எச்சரிக்கும் பைடன்!
உக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் கொடூரமான தாக்குதல் குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe biden) , உக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புட்டின் (Vladimir Putin)மட்டுமே பொறுப்பு என கூறினார்.
அத்துடன் இதற்காக விளாமிடிர் புதின் (Vladimir Putin) , நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்" என்றும் பைடன் எச்சரித்தார். 'ஸ்டேட் ஆஃப் யூனியன்' (அமெரிக்க ஒன்றியத்தின் நிலை) உரையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொடங்கிய பைடன் (Joe biden) இந்த எச்சரிக்கையை புட்டினுக்கு விடுத்தார்.
சர்வாதிகாரிகள் தங்கள் ஆக்கிரமிப்புக்கு உரிய விலையை தராவிட்டால், அவர்கள் மேலும் குழப்பத்தை விளைவிப்பார்கள் என்று கூறிய பைடன் (Joe biden) , முன்கூட்டியே திட்டமிட்ட, தூண்டுதல் ஏதுமில்லாத போரை தொடங்கியபோது "சுதந்திரத்தை நேசிக்கும் நாடுகள்" அமெரிக்காவுடன் நிற்பதாக குறிப்பிட்டார்.
மேலும் "புட்டின் (Vladimir Putin) தவறாக கணக்குப் போட்டுவிட்டார் என தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன் (Joe biden) , நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றும் தெரிவித்தார்.