புட்டின் பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை ; உக்ரைன் ஜனாதிபதி
யுக்ரைன் போரில், ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே செலென்ஸ்கி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
பொருளாதாரத் தடைகள்
ரஷ்யா இன்னும் தாக்குதல் நடத்தி யுக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயற்சிக்கிறது. புட்டின் உலகை சோதிப்பதாகவும் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ரஷ்யா மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய தனிநபர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான வரிகள் விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் பிற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை என்றும் யுக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி குற்றம்சுமத்தியுள்ளார்.