புதின், ஸெலென்ஸ்கி போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர் : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்த நாட்டு அதிபர்கள் விரும்புகின்றனர் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர். அவர்களிடம் இதுகுறித்து பேசிக்கொண்டு இருக்கிறேன்.
நான் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த ரஷ்யா - உக்ரைன் போர் எளிதாக முடிந்திருக்கும். ஏனென்றால், எனக்கு இரு தரப்புத் தலைவர்களையும் தெரியும்.
நான் இந்தியாவையும், பாகிஸ்தானையும் கையாண்டிருக்கிறேன். அணு ஆயுதம் போன்ற மிகவும் மோசமானதாக இருந்திருக்கக்கூடிய மற்ற போர்களையும் கையாண்டிருக்கிறேன்.
ஆகவே, இந்த ரஷியா - உக்ரைன் போரையும் நான் விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.