டிரம்பிற்கு கட்டார் அரசு விமானம் வழங்கியதா? வெள்ளை மாளிகை விளக்கம்
கட்டார் அரச குடும்பத்தினரால் அமெரிக்காவிற்கு வழங்கப்படும் சொகுசு விமானம் குறித்து பரப்பப்படும் தகவல்கள் பிழையானவை என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லேவிட்ட் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டாவது பதவிக்காலத்தில் பயன்படுத்த இந்த விமானம் வழங்கப்படுவதாக சில தரப்பினர் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த விமானம் அமெரிக்க விமானப்படையின் திட்டம் மட்டுமே. அதற்கு டிரம்ப் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று தெளிவாக கூற விரும்புகிறோம்,” என்று லேவிட்ட் கூறியுள்ளார்.
இந்த Boeing 747-8 வகை சொகுசு விமானத்தை அமெரிக்க பாதுகாப்பு துறை ஏற்றுக்கொண்டு, அதனை பாதுகாப்பு வசதிகளுடன் விமானப் படை விமானமாக மாற்றி அதில் ஜனாதிபதி பயணங்களை மேற்கொள்ளவும், பின்னர் அது டிரம்ப் பதவியில் இருந்து விலகிய பிறகு அவரது ஜனாதிபதி நூலகத்திற்கு வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியிருந்தன.
எனினும், டிரம்ப் அதனை பதவிக்காலத்துக்குப் பிறகு பயன்படுத்த மாட்டேன் என மறுத்துள்ளார். கட்டார் அரசு இந்த விமானத்தை அமெரிக்க விமானப்படைக்கு வழங்க விரும்புகின்றனர்.
இது அனைத்து சட்டரீதியான மற்றும் ஒழுங்குத்திறன் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏற்கப்படும். இது ஒரு தனிப்பட்ட நன்கொடை அல்ல, இது நாட்டுக்கான ஒரு வழங்கல். எனவே கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பாக தவறான செய்திகளை வெளியிட்டவர்கள் தங்கள் செய்திகளை திருத்த வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விமானம் தொடர்பான முடிவுகள் முழுமையாக பாதுகாப்பு மற்றும் சட்டக் கோட்பாடுகளுக்குள் மட்டுமே எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அண்மையில் டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செய்த விஜயத்தின் போது கட்டார் அரசாங்கம் இந்த விமானத்தை வழங்குவது பற்றி அறிவித்திருந்தது.