கனடாவில் பாரியளவில் முதலீடு செய்யும் கட்டார்
கனடாவின் முக்கிய கட்டுமானத் திட்டங்களுக்காக கட்டார் முக்கியமான மூலோபாய முதலீடுகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.
இந்த முதலீடுகள் மூலம் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்படுவதுடன், சக்திவளத் துறைகள் மேலும் வேகமெடுக்கும் எனவும், கனடியர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் பிரதமர் கார்னி கூறியுள்ளார்.

கனடா–கட்டார் இருதரப்பு உறவுகளில் இது “புதிய அத்தியாயம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான மக்களுக்கிடையேயான (people-to-people) கலாசார உறவுகளையும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த கனடா–கட்டார் இடையிலான நேரடி விமான சேவைகள் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
வேறு நாடுகளின் கலாசாரம் மற்றும் பார்வைகளை மக்கள் புரிந்துகொள்ளும்போது, அவர்கள் செழுமையடைகிறார்கள்; ஒருவர்மீது ஒருவர் அதிக நம்பிக்கையும் உருவாகிறது. அதனால் ஒன்றாக மேலும் செய்யவும், ஒன்றாக கட்டியெழுப்பவும் அவர்கள் விரும்புகிறார்கள்,” என கார்னி தெரிவித்துள்ளார்.