கனடாவில் வாழ்க்கை துணையையும் பிள்ளைகளையும் கொன்ற நபர் பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்
கனடாவில், தனது வாழ்க்கைத் துணையையும், இரண்டு சிறிய குழந்தைகளையும் கொலை செய்த மொஹமட் அல் பலூஸ் என்ற நபர், தற்போது ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனினும் பலூஸ் ஆண்கள் சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டியிருப்பதாக கனடியச் சிறைச்சாலைகள் சேவைகள் திணைக்களம் (CSC) அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பரில், மொன்ரியால் அருகே உள்ள ப்ரோசார்ட் நகரில் நடந்த இக் கொடூர கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனைவி சிந்தியா புசியர் என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்ததற்காக இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஐந்து மற்றும் இரண்டு வயது குழந்தைகளை திட்டமிட்டு கொலை செய்ததற்காக முதல் நிலை கொலை குற்றச்சாட்டில் 2023 டிசம்பரில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் 25 ஆண்டுகள் பரோல் (parole) பெறும் வாய்ப்பு இல்லை எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தண்டனை முடிவான பின்னர், பலூஸ் பெண் சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், முழுமையான மதிப்பீட்டுக்குப் பிறகு, அவர் ஆண்கள் சிறையிலேயே தங்க வைக்கப்படுவார் என CSC அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் கனடா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.