கனடாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 1 மில்லியன் பறவைகள் பலி எங்கு தெரியுமா?
கியூபக்கில் பறவை காய்ச்சல் காரணமாக பலியான பறவைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு இதுவரை காலம் வரையில் சுமார் ஒரு மில்லியன் பறவைகள் உயிரினம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோய் காரணமாகவும் நோய் தற்று பரவுகை காரணமாக கொல்லப்பட்ட பறவைகள் என்பவற்றின் மொத்த எண்ணிக்கை இவ்வாறு ஒரு மில்லியனை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனேகமான பறவை பண்ணைகள் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்த போதிலும் பறவை காய்ச்சல் தொற்று பரவுகை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தின் சுமார் 20 இடங்களில் தொடர்ந்தும் பறவை காய்ச்சல் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்திற்கு அடுத்தபடியாக ஆல்பர்ட்டாவில் கூடுதல் எண்ணிக்கையில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது.
பறவைக் காய்ச்சல் நோய் காரணமாக பண்ணையாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்கியே வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது