கியூபெக் மாகாணத்தில் சடுதியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 9,397 பேர் பாதிப்பு அறுவர் உயிரிழப்பு
கியூபெக்கில் அதிகரித்து வரும் வகை கொரோனா பரவல் காரணமாக பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில் இன்றைய தினம் 9,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கியூபெக் மாகாண சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த கொரோனா பாதிப்பு தொகையானது கியூபெக் மாகாணத்தில் இதுவரை வெளியிட்டபட்ட அதி உச்சபாதிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையினை கியூபெக் மக்கள் எதிர்கொள்வார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதனன்று, கியூபெக் மாகாண பிரீமியர் பிரான்சுவா லெகால்ட் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு வேண்டுகோள் விடுத்தார். கியூபெக் மாகாண மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தடுப்பூசி போடப்படாதவர்களே என்றாலும், கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் தடுப்பூசி போடப்படாதவர்கள் என்று லெகால்ட் தெரிவித்திருந்தார்.
அங்கு கருத்து தெரிவித்த பிரீமியர் பிரான்சுவா லெகால்ட் ''தடுப்பூசி போடாமல், எங்கள் சுகாதார துறையினரை ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலம் நீங்கள் உங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறீர்கள்" என்று எச்சரிக்கை விடுதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.