கியூபெக் தமிழ் மக்களால் மேயர் பேட்ரிக் பிரவுனுக்கு அமோக வரவேற்பு..!
கனடிய பழமைவாத கட்சியின் தலைவர் எரின் ஓ'டூல் (Erin O'Toole) தலைமைத்துவத்திலிருந்து விலகியதால் பின்னர் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடை பெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த தலைமைத்துவ போட்டியில் பிராம்டன் மாநகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) முன்னாள் கூட்டாட்சி முற்போக்கு கன்சர்வேடிவ் தலைவர் ஜீன் சாரெஸ்ட் (Jean Charest) மற்றும் ஒட்டாவா கார்ல்டன் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) ,ரூக்கி ஒன்டாரியோ பாராளுமன்ற உறுப்பினர் லெஸ்லின் லூயிஸ் (Leslyn Lewis) மற்றும் சுயேட்சை ஒன்ராறியோ எம்பிபி ரோமன் பாபர் (Roman Baber) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் ஒண்டாரியோ மாகாணத்தில் தனது பிரசாத்தை ஆரம்பித்த பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) நேற்றைய தினம் கியூபெக் மாகாணத்தில் மொன்றியல் செயின்ட் லாரண்ட் பகுதில் அமைந்திருக்கின்ற கணேஷா விருந்துபசார மண்டபத்தில் கியூபெக் மாகாண தமிழ் மக்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பேட்ரிக் பிரவுனுக்கு (Patrick Brown) தங்களது ஆதரவினை சிறந்த முறையில் வழங்கியிருந்தது குறிப்பித்தக்கது.
அங்கு தமிழ் மக்கள் மத்தியில் உறையாற்றிய பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) கடந்த காலங்களில் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவொழிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தான் பழமைவாத கட்சியின் தலைவராக தெரிவானால் இனவழிப்பு செய்த இலங்கை அரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


