இன வெறி Message ;சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஹரி !
பிரிட்டன் இளவரசர் ஹரி, பின்னர் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
தனது மனைவியை பக்கிங்ஹாம் அரன்மனை அதிகாரிகள், இன வெறியோடு நடத்துகிறார்கள். அரச குடும்பத்தில் தனது மனைவியை வேறுபாடாக பார்கிறார்கள் என கூறி மாளிகையில் இருந்து வெளியேறினார் இளவரசர் ஹரி.
டயானா நினைவாக ஒரு அறக்கட்டளை
இளவரசர் ஹரி சில வருடங்களுக்கு முன்னர் தனது அன்னை டயானா நினைவாக ஒரு அறக்கட்டளையை நிறுவினார். இதற்கு Dr Sophie Chandauka என்ற ஆபிரிக்க பெண்ணை தலைவராக நியமித்தார்.
இந்த நிலையில் Dr Sophie Chandauka கொண்டு வந்த பல திட்டங்களை நிராகரித்ததனால் அவர்கள் இடையே முறுகல் தோன்றியுள்ளது.
இந்நிலையில் அது தொடர்பாக ஹரி , அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் போது மிகவும் கீழ் தரமான வார்த்தையால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹரி அறக்கட்டளையின் நிவாகப் பொறுப்பில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் Dr Sophie Chandauka விலகினார். இந்த குறுஞ்செய்திகள் சிலவற்றை மீடியாவுக்கு வெளியிட்ட அந்தப் பெண், ஹரி தொடர்பாக பேசி வருகிறார்.
எனினும் இளவரசர் ஹரி திட்டி எழுதிய குறுஞ்செய்தியை அந்தப் பெண் இதுவரை வெளியிடவில்லை என்றும், அது வெளியானால், ஹரின் இன வெறி Message சர்ச்சையை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.