தெற்கு காசாவில் ரஃபா எல்லை திறப்பு
தெற்கு காசாவில் உள்ள ரஃபா எல்லைக் கடப்பு முதன்முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து இந்த எல்லை கடப்பு மூடப்பட்டிருந்தது. காசா பகுதிக்குள் செல்லும் எல்லைக் கடப்புகளில் ரஃபா எல்லைக் கடப்பும் அடங்கும்.

மோதல் நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவது உட்பட பல அவசியமான பாதுகாப்பு மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை வெளியேற்றுவதற்கும் ரஃபா எல்லைக் கடப்பு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இந்தநிலையிலேயே ரஃபா எல்லைக் கடப்பு மீள திறக்கப்பட்டுள்ளது.