FedEx நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ராஜ் சுப்ரமணியம்!
FedEx நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் (Raj Subramaniam) நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 வயதான ராஜ் சுப்ரமணியம் (Raj Subramaniam), 1991ம் ஆண்டு FedEx நிறுவனத்தில் இணைந்துகொண்டதுடன் அவர் நிறுவனத்தின் இயக்குநராகவும் செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள போட்டி தன்மையை எதிர்கொளும் நோக்கில் ராஜ் சுப்ரமணியம் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் FedEx நிறுவனத்தின் நிறுவுனர் 77 வயதான ஸ்மித், நிலைத்தன்மை, புதுமை, பொதுக் கொள்கை மற்றும் பிற உலகளாவிய பிரச்சினைகளை மேற்பார்வையிடும் செயல் தலைவர் பதவிக்கு மாறுவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் உள்ள யு.எஸ். மரைன் கார்ப்ஸில் அதிகாரியாகப் பணியாற்றிய ஸ்மித் (Smith), 1973ல் அதிகாரப்பூர்வமாக ஃபெடரல் எக்ஸ்பிரஸை 389 குழு உறுப்பினர்கள் மற்றும் 14 சிறிய விமானங்களுடன் தொடங்கினார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த IIT பட்டதாரியான ராஜ் சுப்ரமணியம் (Raj Subramaniam), FedEx இல் 27 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதுடன், FedEx நிறுவனத்தில் அவர் பல்வேறு நிர்வாக நிலை பதவிகளை வகித்துள்ளார்.
அதேவேளை , FedEx து உலகம் முழுவதும் சுமார் 600,000 பணியாளர்களைக் கொண்டு இய்ங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.