இளம்பெண் புகைப்படம் வெளியிட்டு உதவி கோரிய பொலிஸ்
வின்னிபெக்கில் கடைசியாக காணப்பட்ட 18 வயது பெண் தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு பொலிசார் உதவி கோரியுள்ளனர்.
கடந்த 18ம் திகதி வின்னிபெக்கில் கடைசியாக காணப்பட்டுள்ளார் 18 வயதேயான Precious Keeper. அதன் பின்னர் அவர் மாயமாகியுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், அவரது புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.
மெலிந்த உடல்வாகு கொண்ட Precious Keeper, 5’8” உயரம் கொண்டவர் எனவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இவர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், Red River North பொலிசாரை தொடர்பு கொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மட்டுமின்றி குற்ற நிகழ்வு தடுப்பு பொலிசாரின் இணைய பக்கத்திலும் தகவல்களை ரகசியமாக பகிரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.