கனடா பொலிஸ் சேவையில் பெரும் மாற்றம் !
கனடாவின் RCMP (Royal Canadian Mounted Police) பொலிஸ் சேவையை மேம்படுத்தும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
தீவிர குற்றங்களை கண்காணிக்கும் சிறப்பு பொலிஸ் அமைப்பாக கனடிய பொலிஸ் சேவையை மாற்ற வேண்டும் என பிரதமர் உத்தேசித்துள்ளார்.
RCMP-ஐ உலகத்தரம் வாய்ந்த புலனாய்வு மைய பொலிஸ் அமைப்பாக உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கனடாவில் மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்ட குற்றங்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என குறிப்பிடடுள்ளார்.
பிற மாநில அரசுகளும், பூர்வீக சமூகங்களும் புதிய காவல் முறைமைக்காக ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடிய பொலிஸ் திணைக்களம் தற்போது மிகுந்த அழுத்தத்தில் உள்ளதாகவும், அதனை மாற்ற முயன்று வருவதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.