பிரதிப் பிரதமர் அச்சுறுத்தப்பட்டமை குறித்து விசாரணை
கனடாவின் பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 26ம் திகதி அல்பர்ட்டாவில் வைத்து பொதுமகன் ஒருவரினால் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் அச்சுறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக இழிவான வார்த்தைகளினால் குறித்த நபர், கிறிஸ்டியாவை திட்டியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை அதிகாரிகள் மீது அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் கண்டிக்கப்பட வேண்டியது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.