பிரிட்டனில் வரலாறு காணாத கடும் குளிர்; மைனஸ் 23 டிகிரிக்கும் கீழ் பதிவான வெப்பநிலை
பிரிட்டனில் வரலாறு காணாத குளிரால் சில பகுதிகளில் மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. பிரிட்டனில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருகிறது. அங்கு குறிப்பாக லண்டன், பெரமர், அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் உறைபனி போன்ற குளிர் பிரதேசமாக மாறியுள்ளது. இந்நிலையில் அங்கு மைனஸ் 23 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதேபோல், லண்டனை அடுத்துள்ள கென்ட் மற்றும் டோவர் பகுதிகளில் மைனஸ் 20 டிகிரி குளிர் நிலவுவதால் நூற்றுக்கணக்கான வாகன ஊர்திகள் பனியில் மாட்டிக்கொண்டுள்ளன. இந்த கடும் குளிர் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது லண்டனில் பதிவாகியுள்ள மைனஸ் 23 டிகிரி குளிரானது 1995ம் ஆண்டுக்கு பின் அதிகளவு குளிரை பதிவாகியுள்ளது.
மேலும், 1955ம் ஆண்டு நிலவிய குளிருக்கு இணையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.