இயோன் சூறாவளி குறித்து பிரித்தானிய மக்களுக்கு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
இயோன் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அசாதாரண முறையில் பிரித்தானியாவை தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
சூறாவளியின் தன்மை வலுவாக காணப்படுவதன் காரணமாக அங்கு மிகவும் அரிதான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் சூறாவளியின் தாக்கம் பாரியளவில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்டுள்ள பிரதேசங்களின் கரையோர பகுதிகளில் மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏலவே பல விமான மற்றும் படகு போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வட அயர்லாந்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இடங்களிலும் சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இது தவிர 715,000 குடியிருப்புக்களிற்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் பாரிய வெள்ளம் ஏற்படுவதற்கான ஏதுநிலை உருவாகியுள்ளதாகவும் பிரித்தானிய வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.