வரலாற்றில் முதல் தடவையாக றீ(ச்)ஷாவில் நடைபெற்ற மாபெரும் நத்தார் தின போட்டி! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?? (படங்கள்)
இலங்கையின் மிகவும் பிரபல்யமான சுற்றுலா மையமான கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) மிகப் பிரமாண்டமான முறையில் நத்தார் தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
இதன்படி நத்தார் தினமான நேற்று சனிக்கிழமை மு.ப 10 தொடக்கம் இரவு 10 மணி வரை கிளிநொச்சியில் - இயக்கச்சி - றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) இடம்பெற்றுள்ளது.
இதன்போது விளையாட்டுக்கள், பாடல் போட்டிகள் மற்றும் விருந்தோம்பல்கள் என்பனவும் இடம்பெற்றுள்ளதுடன் ஏராளமானோரும் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) மிகப் பிரமாண்டமான முறையில் நத்தார் பாடகர் குழுக்களுக்கான போட்டிகளும் நடைபெற்றதுடன் பரிசுத் தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த போட்டியில் உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய பாடகர் குழு, கிளிநொச்சி கிறிஸ்து அரசர் ஆலயம் பாடகர் குழு, முறிகண்டி குழந்தை யேசு ஆலயம் பாடகர் குழு மற்றும் முழங்காவில் கிருபை சுவிசேச சபை பாடகர் குழுக்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தன.
இப்போட்டியில் உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய பாடகர் குழு முதலிடதைப் பெற்று 50,000 ரூபாய் பரிசுத் தொகையினை பெற்றுள்ளது.
இரண்டாவது பரிசுத் தொகையான 30, 000 ரூபாவினையும் கிளிநொச்சி கிறிஸ்து அரசர் ஆலயம் பாடகர் குழுவும் மூன்றாவது பரிசுத் தொயைான 20,000 ரூபாவினை முழங்காவில் கிருபை சுவிசேச சபை பாடகர் குழுவும் பெற்றுள்ளது.
அத்துடன் நான்காவது பரிசுத் தொகையான 10, 000 ரூபாய் பரிசுத் தொகையினை முறிகண்டி குழந்தை யேசு ஆலயம் பாடகர் குழுபெற்றுள்ளது.


