கனடாவில் ஏமாற்றப்படும் இந்திய புகலிடக் கோரிக்கையாளர்கள்; வெளியான மோசடி!

Released fraud Indian asylum seekers deceived in Canada
By Vasanth Feb 13, 2021 10:51 AM GMT
Report

கனடாவில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவதாக வாக்களிக்கும் ஒரு கூட்டம், இலவச சேவைகளுக்கு கூட பணம் பெற்றுக்கொண்டு இந்திய புகலிடக் கோரிக்கையாளர்களை ஏமாற்றுவது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மொன்றியல் சமூக சேவகியான Anne-Marie Bellemareஐ, கடந்த 18 மாதங்களாக, தொடர்ந்து பல இந்திய புகலிடக்கோரிக்கையாளர்கள் சந்தித்து தங்கள் பிரச்சினைகளை தெரிவித்துள்ளார்கள்.

எளிதாக கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக இந்தியர்களிடம் வாக்களிக்கும் சிலர், அதற்காக பெருந்தொகை ஒன்றை பெற்றுக்கொண்டு அவர்களை கனடாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஒரு குழந்தையை மட்டும் இந்தியாவில் விட்டு வந்துவிட்டால் விசா பிரச்சினை இருக்காது என்றும், விரைவில் குடும்பத்துடன் இணைந்துவிடலாம் என்றும் வாக்களிக்கிறார்களாம் இந்த மோசடியாளர்கள். ஆனால், அவர்கள் குழந்தையை விட்டுவிட்டு கனடா வந்தபிறகு, அவர்களுக்கு எந்த தகவலும் கொடுக்கப்படுவதில்லையாம்.

அப்படி மோசடியில் சிக்கிய விவசாயி ஒருவர், தனது நிலம் அனைத்தையும் விற்றுவிட்டு கனடா கனவுகளுடன் 20,000 டொலர்கள் கட்டணம் செலுத்தி கனடாவுக்கு வந்திருக்கிறார். இதேவேளை இன்னொரு பக்கம், Dr. Juan Carlos Chirgwin என்ற மருத்துவர் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

அவரிடம் வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர், மொன்றியலில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தியது குறித்த கதைகளை பகிர்ந்துகொள்கிறார்களாம். அதுவும், பணி உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்காக அவர்கள் இந்த மருத்துவர்களை அணுகும்போது, இலவச சேவைகளுக்கு, ஏராளம் பணம் பெற்று அவர்களை அந்த மருத்துவர்கள் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளதாக Juan தெரிவிக்கிறார் .

இப்படி கனடா வரும் பலருக்கு, சட்ட உதவி இலவசம் என்பதும், புகலிடக்கோரிக்கையாளர்கள் செட்டில் ஆக உதவுவதற்காக அரசு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள PRAIDA என்ற அமைப்பு உள்ளது என்பது குறித்த விடயமும் தெரியவில்லை என்கிறார் அவர். PRAIDA அமைப்பு ஏராளமான சேவைகளை இலவசமாகவே வழங்குகிறது. ஆனால், அது தெரியாத புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர், பெருந்தொகைகளை செலுத்தி ஏமாந்து வருகிறார்கள், அது சட்டவிரோதம் எனவும் Juan கூறுகிறார் .

இதேவேளை பிள்ளைகளை விட்டு விட்டு கனடாவுக்கு வரும் பலர், மன அழுத்தத்துக்கும் தற்கொலை எண்ணங்களுக்கும் ஆளாகிறார்கள் என Juanம் சமூக சேவகியான Anne-Marieயும் தெரிவிக்கின்றனர். பொதுவாக, கனடாவில் முதல் புகலிடக்கோரிக்கை தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கே குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை ஆகும்.

மேல் முறையீடு செய்யவேண்டுமென்றாலோ பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், இது தெரியாமல் சொத்தை விற்று ஏராளம் பணத்தை செலுத்திவிட்டு பலர் கனடாவில் வந்து என்ன செய்வதென தெரியாமல் பல ஆண்டுகளாக விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

20,000 டொலர்கள் செலுத்திவிட்டு கனடா வந்த அந்த விவசாயி, தானும் தன் குடும்பமும் கனடாவுக்கு வரமுடிந்ததற்காக தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவிக்கிறார். ஆனால், கனடாவிலேயே அவர்களால் தொடர்ந்து வாழ முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US