அமெரிக்க வரலாற்றில் முதன்முறை; மக்களவை நாயகர்பதவியில் இருந்து நீக்கம்
அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) மக்களவை நாயகர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புளோரிடா (Florida) நாடாளுமன்ற உறுப்பினர் மேட் கேட்ஸ் (Matt Gaetz) திரு. மெக்கார்த்தியைப் பதவியிலிருந்து அகற்ற வகைசெய்யும் தீர்மானத்தை நேற்று முன்தினம் (2 அக்டோபர்) சமர்ப்பித்தார். அண்மையில் அமெரிக்க அரசாங்கம் முடங்கிப் போகக்கூடிய நிலையில் இருந்தது.
எனினும் அத்தகைய நிலையைத் தவிர்ப்பதற்குத் மெக்கார்த்தி போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என் குற்றம் சுமத்தப்பட்டது.
அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்த நிலையில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 208 பேருடன் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 8 பேரும் மெக்கார்த்தியின் பதவி நீக்கத்தை ஆதரித்து வாக்களித்தனர்.
அதேவேளை மக்களவை நாயகருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை.
இந்நிலையில் புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்கும்படி அதிபர் ஜோ பைடன் மக்களவையைக் கேட்டுக்கொண்டுள்ளார்.