கனடாவில் ஆபத்தான வகையில் வாகனம் செலுத்திய நபர் கைது
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் மிகவும் ஆபத்தான வகையில் வாகனம் செலுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒட்டாவாவில் ஏற்கனவே ஸ்டண்ட் டிரைவிங் அல்லது ஆபத்தான வகையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதான சாரதி, மீண்டும் அதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த முறை, அதிகமான தண்டனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பேங்க்பீல்ட் வீதி Bankfield Road அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலை Highway 416-ல் அந்த சாரதி மணிக்கு 156 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த அக்டோபர் மாதம், இதே சாரதி மணிக்கு 181 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி பிடிபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த புதிய குற்றச்சாட்டின் அடிப்படையில், குறைந்தது 3 ஆண்டுகளுக்கான சாரதி உரிமம் ரத்து, அதிகபட்சம் $10,000 வரை அபராதம் மற்றும் ஒவ்வொரு வழக்குக்கும் 6 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒன்டாரியோவில் ஸ்டண்ட் டிரைவிங் குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களுக்கு வழக்கமான நடைமுறையாக, சாரதியின் உரிமம் உடனடியாக 30 நாட்கள் நிறுத்தப்படுகிறது மற்றும் வாகனம் 14 நாட்களுக்கு காவலில் வைக்கப்படுகிறது.