நாட்டு மக்களிடம் யுக்ரைன் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை
ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டு மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கோரியுள்ளார்.
யுக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அத்துடன், ரஷ்ய படைகள், யுக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், நாட்டு மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் எனவும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் சக்தி வாய்ந்த ஆயுதங்களால் யுக்ரைன் இராணுவ தளபாடங்களை, ரஷ்ய படைகள் தாக்கி வருவதாக யுக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்கும் வகையில், யுக்ரைன் மெட்ரோ தொடருந்து சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது