1500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் விழுந்த மோதிரத்தில் தெரியும் உருவத்தால் ஆய்வாளர்கள் அதிர்ச்சி!
இஸ்ரேலில் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக கடலில் மூழ்கிய 2 கப்பல்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இயேசுவின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள செசேரியா என்னும் துறைமுகத்தில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பாக புயல் ஒன்று வீசியுள்ளது. இந்தப் புயலால் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கப்பல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் தற்போது அந்த கப்பல்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வந்தனர். இதன்போது ரோம பேரரசு காலத்தைச் சேர்ந்த வெண்கல நாணயங்களும், வெள்ளிப் பொருட்களும் கிடைத்துள்ளன. மேலும், பச்சைக்கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்றும் கிடைத்துள்ளது.
மீட்கப்பட்ட அந்த மோதிரத்தில் இயேசுவின் உருவம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.