அண்டவெளியிலிருந்து கிடைத்த ரேடியோ சமிக்ஞை; கனேடிய-இந்திய ஆய்வாளர்கள் சாதனை
அண்டவெளியிலிருந்து கிடைக்கப் பெற்ற ரேடியோ சமிக்ஞை தொடர்பில் கனேடிய மற்றும் இந்திய ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சுமார் ஒன்பது பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருந்து இந்த சமிக்ஞை கிடைக்கப் பெற்றுள்ளது.
நாம் நாழும் ஞாயிற்றுத் தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன்னர் சுமார் 4.9 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு முன்னர் இந்த சமிக்ஞை வெவ்வள்ளியிடப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கனடாவின் மொன்றியலில் அமைந்துள்ள மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் விஞ்ஞான நிறுவகம் என்பனவற்றின் ஆய்வு மாணவர்களினால் இந்த சமிக்ஞை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தொலைதூரத்திலிருந்து இவ்வாறு சமிக்ஞைகளை துல்லியமாக பெற்றுக் கொள்வது மிகவும் அரிதான ஓர் விடயம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சமிக்ஞைகளின் மூலம் அண்டவெளியின் தோற்றம் பற்றிய பல்வேறு உண்மைகளை கண்டறிந்து கொள்ள முடியும் என ஆய்வாளர்களான நிருபம் ரோய் மற்றும் அர்னம் சக்ரபோர்த்தி ஆகியோர் தெரிவிக்கின்றனர்.