கனடாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் ஒருவர் கைது
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் தீவிரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தீவிரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு நபர்களை கனடிய பொலிஸார் கைது செய்திருந்தனர். தந்தையும் மகனும் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் குறித்த இருவரையும் அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் 20 வயதான பாகிஸ்தான் மற்றும் கனடிய பிரஜை ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையில் குறித்த நபரை கனடிய பொலிஷார் கைது செய்துள்ளனர்.
20 வயதான மொஹட் சேஸாப் கான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் அவரிடமிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        