அமெரிக்க துணை அதிபரை மாற்ற தீர்மானமா? புதிய நபரை தேடும் முயற்சியில் ஜோ பைடன்
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மீது கடும் அதிருப்தியில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு உச்சநீதிமன்ற பதவியை வழங்கிவிட்டு புதிய துணை அதிபரை தேர்வு செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
எல்லை பிரச்சனை தொடர்பில் கமலா ஹாரிஸ் செயல்பாடு ஜோ பைடனுக்கு திருப்தியாக இல்லை என்றும், அவரை விட போக்குவரத்துக்கு அமைச்சர் பீட் பட்டிகெக்கிற்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2021 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிபர் மற்றும் துணை அதிபர் இடையே கருது வேறுபாடு ஏற்பட்டுள்ளது.