எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள்... குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்த கடற்கரை ரிசார்ட்
நோவா ஸ்கோடியாவில் செயல்படும் ரிசார்ட் ஒன்று குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு 15 டொலர் என அறிவித்துள்ளது.
இது மாகாண சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளதை விட 2 டொலர் அதிகமாகும். White Point கடற்கரை ரிசார்ட்டின் இந்த முடிவானது மாகாணம் முழுமையும் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், இதனால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை இருக்காது எனவும் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த புதிய அதிகரிக்கப்பட்ட ஊதியமானது செப்டம்பர் 5ம் திகதி முதல் அமுலுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக ரிசார்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் அனைவரும் அன்றாடம் தத்தளித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள நிர்வாகிகள் தரப்பு, White Point கடற்கரை ரிசார்ட்டின் உரிமையாளர்களே இந்த திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மணிக்கு 15 டொலர் ஊதியமானது அனைத்து நிறுவனங்களாலும் அளிக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.