கனடிய நுகர்வோருக்கு அதிர்ச்சி செய்தி
அமெரிக்க சுங்க வரிகளை எதிர்கொள்வதற்காக பல நிறுவனங்கள் விலைகளை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஆன்லைன் பொருட் கொள்வனவின் போது கட்டண அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வோல்மார்ட், லெப்லோவஸ் Walmart, Loblaws, மற்றும் ரால்ப் லாவுரான் Ralph Lauren போன்ற நிறுவனங்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகளினால் ஏற்பட்ட செலவுகளை நுகர்வோர் மீது சுமத்துவதனைத் தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தொழில்கள் அரைவாசிக்கும் மேற்பட்டவை இதேபோன்ற திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அலியான்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் Allianz Insurance நடத்திய ஒரு கருத்துக்கணிப்பின்படி தெரியவந்துள்ளது.
"இப்போது நுகர்வோர்களுக்கும் தொழில்களுக்கும் விலை பற்றிய அதிர்ச்சி நிலவி வருகிறது," என வணிக நிபுணர் புருஸ் வின்டர் Bruce Winder தெரிவித்துள்ளார்.
தாங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்கள் தவிர்ந்தும் சுங்கத் தீர்வைகள் மற்றும் வரிவிதிப்புகள் சேர்க்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் கனடிய பிரதான ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளனர்.
ஒரு உதாரணத்தில், 95 டொலருக்கு பட்டியலிடப்பட்டிருந்த துணி ஒரு நுகர்வோருக்கு சென்றடையும் போது 209 டொலராக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பல் கட்டணங்கள், வரிகள் மற்றும் திரிபுகள் சேர்க்கப்பட்டதால் இவ்வாறு விலை உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் பலவிதமாக இந்த சுங்கத்தீர்வைகளை கையாளுகிறார்கள் என்றாலும், பெரும்பாலான நிபுணர்கள், இது நுகர்வோர்களுக்கு கூடுதல் செலவாகவே முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.