உலகின் பணக்கார நாட்டை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறிய சீனா!
இ உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளதாக ஆய்வொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
உலக பொருளாதாரத்தின் நிகர மதிப்புகள் குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் நடாத்தப்பட்ட ஆய்விலே இவ்வாறு கூறப்படுள்ளது.
இதற்காக உலகின் 60 சதவீத வருமானத்தை வைத்திருக்கும் நாடுகளின் இருப்பு நிலை குறித்து 2000 முதல் 2020ம் ஆண்டு வரையிலான தரவுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது,
“2000ம் ஆண்டில் 156 டிரில்லியன் டாலராக இருந்த உலகின் மொத்த பொருளாதார நிகர மதிப்பு 2020ம் ஆண்டில் 514 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில், மூன்றில் ஒரு பங்கு சீனாவின் பங்களிப்பாகும்.
2000ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார நிகர மதிப்பு 7 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. இது தற்போது 120 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா சுமார் 90 டிரில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவின் மொத்த செல்வத்தில், 3ல் இரு பங்கினை 10 சதவீத பணக்கார குடும்பங்கள் வைத்துள்ளது.
இதன்மூலம் உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியதுள்ளதாக” கூறப்பட்டுள்ளது.
மேலும் பணக்கார நாடுகள் பட்டியலில், ஜெர்மனி 3வது இடத்திலும், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.