பிரான்சின் மூன்றாவது பெரிய நகரம்: மொத்தமாக நெருப்பு வைத்த கலவரக்காரர்கள்
பிரான்சில் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கான திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான லியோனை போர்க்களமாக மாற்றியுள்ளனர்.
புரட்சி என முழக்கமிட்ட மக்கள் கூட்டம் ஒன்று ஆர்ப்பாட்டத்தில் இரண்டாவது நாள் பாரிஸின் மிகப்பெரிய சதுக்கத்தில் இரவில் திரண்டது. லியோன் நகரில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நகராட்சிமன்றத்தில் புகுந்துள்ளதுடன், நெருப்பும் வைத்துள்ளனர்.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கொண்டுவந்துள்ள ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கான திட்டத்திற்கு எதிராக கடுமையான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை அதிகாலை லியோன் நகரில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரங்கள் உள்ளூர் நகராட்சிமன்றத்தில் புகுந்துள்ளதுடன், நெருப்பும் வைத்துள்ளனர். பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மொத்தமாக சேதப்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, சுவற்றில் மேக்ரான் ஆட்சி முடிவுக்கு வருகிறது, மக்களிடம் அதிகாரம் செல்லவிருக்கிறது என எழுதி வைத்துள்ளனர். கலவரத்தடுப்பு பொலிசார், மக்கள் கூட்டத்தின் மீது தடியடியும் கண்ணீர் புகை குண்டு வீச்சும் நடத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு மட்டும் கலவரத்தில் ஈடுபட்ட 61 பேர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை ஏற்கனவே 310 பேர்கள் கைதாகியிருந்தனர்.
பிரான்சில் இனி ஓய்வுபெறும் வயது 64 என உயர்த்தும் ஜனாதிபதி மேக்ரானின் முடிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் ஓய்வுபெறும் வயது பிரேரணையை சட்டமாக மாற்றும் முயற்சியை மேக்ரான் முன்னெடுத்துள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கீதத்தை பாடி தங்கல் எதிர்ப்பை தெரியப்படுத்தியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.